பிரான்ஸ் நாட்டில் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு இல்ல பணியாளர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனாவின் அடுத்த அலை பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பொருளாதார பாதிப்பிலிருந்து தற்போது தான் நாடு மீண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த அலை பரவினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதாரம் மற்றும் பராமரிப்பு இல்லத்தின் அனைத்து ஊழியர்களும், உதவியாளர்களும், அவசர பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்களும் குறைந்தது முதல் தவணை தடுப்பூசியாவது, செலுத்தியிருக்க வேண்டும்.
மேலும், தற்போது வரை, சுகாதார நிறுவனங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்களை சேர்ந்த பணியாளர்கள் சுமார் 84% பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.