சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு சன்சத் தொலைக்காட்சியை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். கடந்த பிப்ரவரி மாதத்தில் லோக்சபா தொலைக்காட்சி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக புதியதாக சன்சத் என்ற பெயரில் தொலைக்காட்சியை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சன்சத் தொலைக்காட்சியை துணை ஜனாதிபதி வெங்காய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் சேர்ந்து இன்று தொடங்கி வைத்தனர். இந்த தொலைக்காட்சியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், திட்டங்கள், கொள்கைகள் அமலாக்கம் போன்றவை ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சியை திறந்து வைத்த பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: இன்று சர்வதேச ஜனநாயக நாள். இன்றைய தினம் சன்சத் தொலைக்காட்சியை திறந்து வைப்பது பொருத்தமானது. நமக்கு ஜனநாயகம் என்பது வெறும் அரசியல் அமைப்பு மட்டுமல்ல, ஆத்மா. ஜீவன் தாரா’’ என்றார்.