நாமக்கல் மாவட்டம் வையப்பமலை, சுண்டங்கி பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். அவரின் மகன் மௌனிஷ்(11) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மௌனிஷ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள துளுக்கணுர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது துளுக்கன் ஊர் ஏரியில் தனது நண்பர்களுடன் மௌனிஷ் குளிக்கப்பதற்காக சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் உறவினர்கள் அப்பகுதியில் முழுவதும் சிறுவனை தேடி உள்ளனர். இதையடுத்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் சிறுவனின் உடல் ஏரியில் மிதப்பதாக ஆத்தூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனையெடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.இந்த சம்பவம் அப்புகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.