முன்னாள் ராணுவ வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் சுந்தர்ராஜ் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக செல்லும் ஒரு அரசு பேருந்தில் குமுளிக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த போது சுந்தர்ராஜூக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் இதுகுறித்து பெருமாள்புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுந்தர்ராஜின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.