Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்…. ரயிலில் உரசிய கல்…. போலீஸ் வலைவீச்சு….!!

கிரிக்கெட் விளையாடிவிட்டு கற்களை தண்டவாளத்தில் போட்டு சென்ற சிறுவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கேரள மாநிலத்திலுள்ள பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக சென்னைக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியிலிருந்து அனுமந்த நகர் இடையே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் நிலையத்தின் அருகில் வந்து கொண்டிருந்ததால் குறைவான வேகத்தில் வந்துள்ளது. அப்போது குளிர்சாதனப் பெட்டியின் அடிப்பகுதியில் ஏதோ உரசுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது.

இதனால் இன்ஜின் ஓட்டுனர் உடனடியாக ரயிலை ப்ரேக் போட்டு நிறுத்தியுள்ளார். பிறகு கீழே இறங்கி பார்த்த போது குளிர்சாதனப் பெட்டியின் அடியில் கல் மீது உரசிய படி நின்றுள்ளது. இது பற்றி ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் கல்லை அகற்றி உள்ளனர்.

இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் ஸ்டம்புக்கு பதிலாக தண்டவாளத்தில் இருக்கும் கற்களை வைத்து விளையாடி இருந்தது தெரியவந்துள்ளது. இதில் கிரிக்கெட் விளையாடி விட்டு திரும்பி செல்லும் போது தண்டவாளத்தில் வைத்த கல்லை எடுக்காமல் சென்றுள்ளனர். இதனால் தான் ரயில் பெட்டிகள் மீது கல் உரசியது என்பது தெரியவந்துள்ளது. மேலும் தண்டவாளத்தில் கலை வைத்து சென்ற சிறுவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |