பீச்சில் கடைகளை வைக்க அனுமதி வேண்டி காவல்துறை சூப்பிரண்டிடம் தொழிலாளிகள் மனு கொடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 130-க்கும் அதிகமான தொழிலாளிகளின் கடைகள் பீச்சில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அனைவரும் இந்த தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அதன்பின் தற்போது கொரோனா காரணமாக பல மாதங்கள் கடைகள் திறக்கப்படாத நிலையில் சமீபத்தில் தான் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் கடைகள் வைக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. பின்னர் காவல்துறையினர் எந்த நாளும் கடைகளை வைக்க கூடாது என கூறியுள்ளனர்.
இது பற்றி நகராட்சி அதிகாரிடம் புகார் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் தான் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை அடுத்து மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் எங்களுக்கு சில்வர் பீச்சில் மீண்டும் கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு எழுதி போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ளனர். மேலும் மனுவை பெற்ற காவல்துறை சூப்பிரண்டு இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.