லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காட்டுசித்தாமூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னை போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குண சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2 ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்க விருந்துள்ளது. இந்த விழாவிற்கு தேவையான பொருட்களை ஆறுமுகம் மற்றும் குண சத்யா தனித்தனி இருசக்கர வாகனத்தில் வாங்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது குண சத்யாவின் இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி திடீரென மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் குண சத்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குண சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.