Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

15 அம்ச கோரிக்கைகள்….. பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் போராட்டம்….. விருதுநகரில் பரபரப்பு….!!

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது இணை ஒருங்கிணைப்பாளரான முத்துசாமி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது எனவும், ஊழியர்களுக்கு மாத இறுதியில் ஊதியம் வழங்க வேண்டும் எனவும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீதம் சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தின் சமூக ஆர்வலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினரான செல்வராஜ் என்பவர் நன்றி உரையை வழங்கியுள்ளார்.

Categories

Tech |