Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொழிலாளி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… பெண் உள்பட 4 பேர் கைது…!!

கூலித்தொழிலாளி கொலை வழக்கில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள கொடைக்கான்வலசை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் ராமநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வைத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து கேணிக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

அந்த விசாரணையில் ராஜேந்திரனின் சகோதரரின் மனைவி சத்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஏர்வாடியை சேர்ந்த தர்மராஜ் மற்றும் கூட்டாளிகள் இணைந்து ராஜேந்திரனை கொலை செய்ய திட்டம் போட்டது தெரியவந்துள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் சத்யா, தர்மராஜ், மணிவாசகம் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய தர்மராஜின் தம்பி வசீகரனையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |