Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு முதலிடம்…. தவறான செய்திகள் பரப்புதல்…. கனடா பல்கலைக்கழகம் ஆய்வு….!!

கொரோனா தொற்று பற்றி தவறான கருத்துக்கள் பரப்புதல் தொடர்பாக கனடா பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நடத்தியுள்ளது.

உலக முழுவதும் கொரோனா தொற்று கடந்த ஆண்டு முதல் தீவிரமாக அனைத்து இடங்களிலும் பரவத் தொடங்கியது. அதிலும் மக்கள் நோய் குறித்து சரியான புரிதல் இன்றி தவறான கருத்துக்களை பரப்பி வந்தனர். குறிப்பாக எலுமிச்சை சாறு குடித்தால் கொரோனா பரவாது, ஏலக்காய், கற்பூரம் கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும். மேலும் கதிர்வீச்சு மூலம் தான் கொரோனா வைரஸ் பரவுகிறது போன்ற பல தகவல்களை மருத்துவ ஆதாரமின்றி கூறி வந்தனர்.

இது போன்ற வதந்திகள் தொடர்பாக கனடாவில் இருக்கும் அல்பட்ரா பல்கலைக்கழகத்தை சேர்ந்த முகமத் சகீர் அல் ஜமான் என்பவர் உலகளவில் உள்ள நூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி ஒன்றை நடத்தினார். அந்த ஆராய்ச்சியில் சுமார் 138 நாடுகள்  96,557 பொய்யான தகவல்களை பரப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிலும் 85%  சமூக வலைதளங்களில் இருந்து வெளியாகியுள்ளது.

குறிப்பாக இணையங்கள் வாயிலாக மட்டும்  91% தவறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதில் 18%துடன் இந்தியா முதலிடத்திலும், பிரேசில் 9%துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. இது போன்ற தவறான கருத்துக்களை பரப்பும் மக்களிடம் இணையதள தகவல் பரிமாற்றம் குறித்து விழிப்புணர்வு இல்லாமை மற்றும் வதந்திகள் பரப்புவது தொடர்பான அறியாமை போன்றவை அதிகமாக காணப்படுகிறது.

Categories

Tech |