மகரம் ராசி அன்பர்களே.! வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இன்று தேவையற்ற சிந்தனை மனதிற்குள் உருவாக்கிக் கொண்டிருக்கும். கொஞ்சம் யோசித்து சில விஷயங்களை பேச வேண்டும். சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய மாட்டீர்கள். மனதிற்குள் அன்பு நிறைந்து காணப்படும். எல்லாவிதமான நன்மையும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான முதலீடுகள் போதும். எல்லாம் உங்களுக்கு நன்மையாகவே நடக்கும். எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். வாகனத்தில் மட்டும் கொஞ்சம் பொறுமையாக சென்று வரவேண்டும். உடன் பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். தொழில் போட்டிகள் விலகி செல்லும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனிக்க முடியும். அலுவலக வேலைகளில் தாமதம் இருந்தாலும் நல்ல விதத்தில் முடியும்.
தகுதி திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். திறமைக்கேற்ற நல்ல பணி கண்டிப்பாக கிடைக்கும். குடும்ப தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்து கொள்வீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். மனதிற்குள் நினைத்த காரியங்கள் இப்போது செயல்வடிவம் பெறும். காதல் விவகாரங்கள் கண்டிப்பாக முன்னேற்றத்தை கொடுக்கும். காதலை பற்றி கவலைப்பட வேண்டாம். மாணவர்களுக்கு இன்று பொறுப்புகள் கூடும். மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்துச் செய்யவேண்டும். சிந்தனையில் மாற்றம் பெறவேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாடு மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 4 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்