சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தலை, பிரித்து, சிதைத்தது அதிமுக தான். அதற்கு மறுப்பு தெரிவிப்பதற்கு அதிமுகவிற்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலை இரு கட்டங்களாக நடத்துவது நடைமுறையில் சாத்தியம் தான். எதிர்வரும் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது அவர்களுடைய விருப்பம்.
கடந்த முறை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் இருந்த கூட்டணி தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதில் எந்த மாற்றமும் கிடையாது. காங்கிரஸ் இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது என்று பேசினார்.