Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்-லில் இருந்து விலக காரணம் இதுதான் …. கிறிஸ் வோக்ஸ் விளக்கம் ….!!!

அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து  இங்கிலாந்து வீரர்  கிறிஸ் வோக்ஸ்  கூறியுள்ளார் .

14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுக்கின்றன. இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் ஆர்ச்சர்,            பென் ஸ்டோக்ஸ் இருவரும் ஏற்கனவே விலகிய நிலையில், தற்போது ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் , கிறிஸ் வோக்ஸ் மற்றும் மலான் ஆகியோர் மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

இதுகுறித்து கிறிஸ் வோக்ஸ்கூறும் போதும், “டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் நான் இடம் பெறுவேன் என எனக்குத் தெரியாது .மேலும் டி20 உலகக்கோப்பை ,ஆஷஸ் தொடர் என அடுத்தடுத்து முக்கியமான போட்டிகள் வருகின்றது .இதனால் குறைந்த நாட்களில் நிறைய போட்டிகள் விளையாட வேண்டிய நிலை ஏற்படும் . ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று எனக்கும் விருப்பம் தான் . ஆனால் ஏதாவது ஒரு தொடரில்  இருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினேன்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |