எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மாநில தேர்தல் கமிஷனருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 234 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் நிலையில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது தேவையற்றது.
தேர்தலை 2 கட்டமாக நடத்துவதால் ஆளுங்கட்சியின் சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது எனவே தேர்தல் நியாயமாக நடத்த வேறு மாநில அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும். மாநில போலீசார், அரசு அலுவலர்கள் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பதால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை அதிக அளவில் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.