மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு குறித்த விவரங்கள் தமிழக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே அரசு செயல்பட வேண்டுமே தவிர, பழிவாங்கும் அரசாக செயல்படக்கூடாது. கல்வியில் அரசியலை புகுத்தியதால் தற்போது தனுஷ், கனிமொழி உள்ளிட்ட மாணவர்கள் தற்கொலை செய்யும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசைப் பொறுத்தவரையில் மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நம்பிக்கை கொடுக்க வேண்டும் மேலும் உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜி.கே வாசன், அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறோம். வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் கேட்டுப் பெறுவோம் என்று கூறியுள்ளார்.