Categories
தேசிய செய்திகள்

6 வயது சிறுமி பாலியல் வழக்கு… துப்பு கொடுத்தா ரூ.10,00,000 சன்மானம்… காவல்துறை அதிரடி அறிவிப்பு…!!!

6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று ஹைதராபாத் நகர காவல்துறை அறிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வந்தனர். ஆனால் சிறுமி எங்கு இருக்கிறார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 30 வயது மதிக்கத்தக்க நபரையும் காணவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் மீதும் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் வீட்டை உடைத்து போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த வீட்டில் அரை நிர்வாணத்தில் சிறுமி போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். சிறுமியின் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. பிறகு சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட அவரை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், சிறுமியின் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி பல்லகொண்ட ராஜூ குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூபாய் 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று ஐதராபாத் நகர காவல்துறை அறிவித்துள்ளது மேலும் இதுகுறித்து தெலுங்கானா அமைச்சர் ராமபுரம் நல்லா ரெட்டி தெரிவித்ததாவது: “பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாங்கள் எங்களின் ஆறுதலை தெரிவிக்கின்றோம். குற்றவாளியை நிச்சயம் பிடித்து என்கவுண்டர் செய்வோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதுடன், தேவையான உதவியை செய்ய தயாராக உள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |