சட்டவிரோதமாக மணல் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாதா நகர் சந்திப்பு பகுதியில் வந்த ஒரு லாரியை போலீஸ் இன்ஸ்பெக்டர் மடக்கி சோதனை மேற்கொண்டார். அந்த சோதனையில் லாரியில் சரியான ஆவணங்கள் இல்லாமல் சரள் மண் கடத்தி வந்தது போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் டிரைவர் பெருமாள் என்பவரை கைது செய்ததோடு, லாரி மற்றும் மணலை பறிமுதல் செய்தனர்.