தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் பிறகு ஆட்சி அமைத்த திமுக, குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்படும் என பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். அதனால் தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் போலியான கார்டுகள் மற்றும் நீண்ட நாட்களாக ரேஷன் வாங்காத கார்டுகள் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் ஒரு நபர் ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரேஷன் ஊழியர்கள் ஒரு நபர் கார்டுக்கு பொருட்கள் வழங்காமல் அவர்களை திருப்பி அனுப்புகின்றனர் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே ஒரு நபர் ரேஷன் கார்டு குறித்து தமிழக அரசு தெளிவான முடிவை விரைவில் அறிவிக்க வேண்டுமென்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரூ.1000 உரிமைத்தொகை பெறுவதற்கு ஒரு நபர் ரேஷன் கார்டு தகுதி உள்ளதா என்பது பற்றி அரசு தெரிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.