சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் உன்ன முனியசாமி கோவில் தெரு, பெரியார்நகர், தோப்புத்தெரு போன்ற சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கை, கால்களில் கட்டு போட்டு நூதன போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு கிளை தலைவர் முத்து ராஜா தலைமை தாங்கினார்.
இதனையடுத்து போராட்டத்தை மாவட்ட செயலாளர் முத்து தொடங்கி வைத்து பேசினார். அதன்பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புறநகர் செயலாளர் ராஜா போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். இதில் கிளை உறுப்பினர்கள் ரஞ்சித்குமார், முத்துசேதுபதி, ஆனந்த், மாரிச்செல்வம், சஞ்சய், ராமர், விஜய், துரைராஜ், சக்தி, முத்துசெல்வம் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.