Categories
தேசிய செய்திகள்

என்-95 முக கவசத்தில் மைக்…. நீட் தேர்வில் பலே மோசடி…. போலீசார் அதிரடி…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் சிகார் பகுதிகளில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பதிலாக போலியான நபர்களை, மோசடி கும்பல் ஒன்று தேர்வு எழுத  வைப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தத்தின் பேரில் அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் 21 மருத்துவ மாணவர்களை இரு வேறு இடங்களில் கைது செய்தனர். அவர்களை சோதனை செய்ததில் சந்தேகிக்கும் வகையில் இருந்த என்-95 முக கவசத்தின் உட்பகுதியில்  மைக்கை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அவர்களை விசாரித்ததில் ஆன்லைனில் தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கி இவற்றுள் மறைத்து வைத்தால் யாரும் கவனிக்க மாட்டார்கள் என இம்முயற்சியை  மேற்கொண்டதாக தெரிவித்தனர். முகக்கவசத்தின் உட்பகுதியில் பேட்டரியில் இயங்க கூடிய கருவியில்  நானோ சிம்மும் பொருத்தப்பட்டுள்ளது, இதில் ஒரு  பொத்தானை அழுத்துவதன் மூலம் தேர்வு அறைக்கு வெளியே உள்ள நபர்களை தொடர்பு கொள்ள இயலும்.

காதின் உட்பகுதியில் பொருத்தக்கூடிய சிறிய வடிவலான இயர்பீஸ்களை பயன்படுத்தி வெளியே இருப்பவர்கள் பேசுவதை தேர்வு எழுதுபவர்கள் கேட்டு தேர்வு எழுதி உள்ளனர். அவர்கள் லட்ச கணக்கில் மாற்று தேர்வர்களுக்கு பேரம் பேசி உள்ளதை ஒப்பு கொண்டுள்ளனர். இதேபோன்று ஜெய்ப்பூரில்தேர்வறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட  18 வயதான தினேஷ்வரி குமாரி உட்பட 8 பேரை  காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |