2011 – 2021 காலகட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகி வருமானவரி பதிவுத்துறை அமைச்சராக அதிமுக அரசில் இருந்தவர் கே சி வீரமணி. இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. அறப்போர் இயக்கம் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.
சென்னையில் மட்டும் கே சி வீரமணி சொந்தமான 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 28இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி தலைமையில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.