பெற்றோர் கண்டித்ததால் கள்ளக்காதலர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆத்துப்பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணன்-தங்கமணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு பிரபாகரன் என்ற மகனும், செல்வி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் தங்கமணி வேலன்பாளையத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரது கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இந்த காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்து 2 பேரையும் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேவாணி பகுதிக்கு வந்தனர். இதனையடுத்து காதல் ஜோடியான தங்கமணி அஸ்வின் ஆகிய 2 பேரும் அப்பகுதியில் ஒரு ஓரம் அமர்ந்து விஷம் குடித்ததோடு, அருகில் இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காதல்ஜோடியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவீட்டாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.