Categories
அரசியல் மாநில செய்திகள்

பழிவாங்கும் நடவடிக்கை… “காவல்துறையை வைத்து”… கட்சியை உடைக்க நினைக்கும் திமுக… மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பரபர பேட்டி !!

திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்..

இன்று காலை முதல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.. திருப்பத்தூரில் மட்டும் 15 இடங்களிலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை என 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.. அதிமுக அரசில் 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 90 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்களை சேர்த்துள்ளதாக கே.சி.வீரமணி மீது முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் அதிமுக அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று கே.சி.வீரமணி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது. நீதிமன்றம் ஒன்று இருக்கிறது.. நீதிமன்றத்தில் நிரபராதி என்று நிலைநாட்டுவோம்.. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை திமுக செய்து வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் இது போன்ற வாக்குறுதிகளை அளித்து,  500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில், மக்களை திசை திருப்ப, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டைக்கு உள்ளாட்சி தேர்தல் இப்போது அறிவித்திருக்கும் நிலையில், பணி செய்ய விடாமல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

காவல்துறையை வைத்து கட்சியை உடைத்து விடலாம்.. காவல்துறையை வைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்களும் களங்கம் கற்பிக்கலாம் என்று நினைக்கிறார்கள். பூனை கண் மூடி விட்டால் உலகம் இருண்டு விட்டது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.. அந்த வகையில் நிச்சயம் எத்தனை விதமான சோதனைகள் வந்தாலும் சரி, காவல்துறை அவர்களுடைய காவல் துறை.. ஜனநாயக நாட்டில் நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கிறது.. அரசியலமைப்பு சட்டத்தின்படி நீதிமன்றத்தில் நிச்சயமாக நீதியை நிலைநாட்டுவோம்.

முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் முறையாக கணக்கு வைத்திருக்கிறார்கள்.. வேண்டுமென்றே பழிவாங்கும் எண்ணத்தோடு தான் ஒரு கட்சியை முடக்க வேண்டும்.. ஒரு கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற காழ்புணர்ச்சியில் இந்த திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினார்..

Categories

Tech |