தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நிறைவேறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதிமயம் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் களத்தில் சிந்திப்போம் வெற்றி நமதே என கமல் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது.
9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே.— Kamal Haasan (@ikamalhaasan) September 16, 2021