சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள மாரியம்மன் கோவில் தெருவில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாகவும் மற்றும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் சின்னதுரை மற்றும் அவரின் நண்பர்களான சரத்பாபு, பிரசாத், மாயவேல் ஆகிய 4 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். பிறகு சிறுமியையும் சின்னதுரையையும் அவரின் நண்பர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வந்துள்ளனர். அப்போது இதனை அறிந்த சின்னதுரை சிறுமியை அழைத்துக் கொண்டு தொழுதூருக்கு வந்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் அவர்களை பிடித்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சின்னத்திரை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் நண்பர்கள் உள்பட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்ததால் நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதில் சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக சின்னதுரைக்கு 2,000 ரூபாய் அபராதமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். அதற்கு பிறகு இந்த தண்டனையை சின்னதுரை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதில் சரத்பாபு, பிரதாப், மாயவேல் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டாததால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட கலெக்டர் 5 லட்சம் ரூபாயை அரசு சார்பாக நஷ்ட ஈடு தொகையாக வழங்க வேண்டும் என நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.