சட்டப்படியாக சமூகநீதி முழுமையாக செயல்படுத்தபடுகிறதா என கண்காணிப்பதற்கான குழு அமைக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சற்றுமுன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திராவிட இயக்கம் என்பது சாமானியர்களை உயர்த்துவதற்காக, சாமானியர்கள் சரித்திரம் படைக்க, தொடர்ந்து சரித்திரம் படைக்கப் படும் உயரிய வரலாற்றைக் கொண்டது என்று முதலமைச்சர் அறிக்கையில் சொல்லியுள்ளார்.
இந்த வரலாறு இன்று, நேற்றல்ல நூற்றாண்டு தொடர்ச்சியை கொண்டது எனவும் சொல்லியுள்ளார். 1916 ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி அன்றைய சென்னை மாகாணத்தில் சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோரின் உரிமை, சுயாட்சி கருத்துக்கள் ஆகியவற்றிற்கு குரல் கொடுத்தது.
இந்நிலையில் சட்டப்படியாக சமூகநீதி முழுமையாக செயல்படுத்த படுகிறதா என கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ஒரு கண்காணிப்பு குழுவை அமைக்க முடிவு எடுத்துள்ளதாகவும், கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகள், நியமனங்களில் சமூகநீதி அளவுகோலை கண்காணிக்க…. சமூகநீதி அளவுகோல் முறையாக முழுமையாக பின்பற்றப்படுகிறதா ? என்பதை கண்காணிக்கவும், வழிகாட்டவும் செயல்படும் விதமாக இந்த குழு இருக்கும் என்றும் அவர் சொல்லியுள்ளார்.
இதில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் என்றும், சமூக நீதி அரசாணை நூற்றாண்டுகளில் சமூகநீதி கண்காணிப்பு குழுவை அமைப்பதால் பெருமை அடைகிறேன் என்று முதலமைச்சர் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.