கேரட் தோசை
தேவையான பொருட்கள் :
தோசை மாவு – 2 கப்
கேரட் – 2
வெங்காயம் – 1
பொடித்த காய்ந்த மிளகாய் – காரத்துக்கு ஏற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் கேரட்டை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும். பின் தோசை மாவில் கேரட் விழுது, நறுக்கிய வெங்காயம் , பொடியாக்கிய காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கலந்து தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றி விரித்து வேக வைத்து எடுத்தால் சூப்பரான கேரட் தோசை ரெடி !!!