Categories
அரசியல் மாநில செய்திகள்

நானே வாறேன்… களத்தில் சந்திப்போம்… களமிறங்கும் கமல்…. ட்விட் போட்டு அதிரடி …!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமயம் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் ஐந்து முனை போட்டியாக அமைந்தது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என பிரதான கூட்டணிகள் இருந்தாலும், தேமுதிக – அதிமுக கூட்டணி அமைத்தது, மக்கள் நீதி மையம் -சமத்துவ மக்கள் கட்சி -இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில் நாம்தமிழர் கட்சி தனித்து தேர்தல் களம் கண்டது.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மையம் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சி தலைவர் கமலஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதிகள் மட்டும் இரண்டாமிடம், முதலிடம் என முன்னணியில் வந்தாலும் கூட இறுதியாக தோல்வி கண்டார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் வெற்றிபெற்றார்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலும் இந்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நீதி மையம் தனித்து போட்டியிடுகின்றது என்று குறிப்பிட்ட கமலஹாசன் , 9 மாவட்டங்களிலும் பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் களத்தில் சந்திப்போம், வெற்றி நமதே என்றும் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் நீதி மைய கட்சியை சேர்ந்த தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Categories

Tech |