விலை மதிப்புடைய 2 செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுமதி தனது வீட்டைப் பூட்டி விட்டு சென்னை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இதனை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் சிலர் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த இரண்டு விலை மதிப்புடைய செல்போன்களை திருடி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சுமதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விலை மதிப்புடைய செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.