மத்திய பிரதேச மாநிலத்தில், மீண்டும் லாட்டரி சூதாட்டம் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. இதனால் ஏழை எளிய மக்கள் பலரும் தாங்கள் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் லாட்டரி சீட்டில் செலவு விட்டுவிடுவதால் பல குடும்பங்கள் அழிந்தன. இதனை காரணமாக வைத்து பல்வேறு மாநிலத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டது. இருப்பினும் சில மாநிலங்களில் லாட்டரி சீட் டிக்கெட் தற்போது வரை விற்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2003ஆம் ஆண்டு முதல் லாட்டரி சீட் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வருவாயை பெருக்குவது லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்கலாம் என்று பேச்சுகள் இருந்துவரும் நிலையில், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் லாட்டரி விற்பனை மற்றும் சூதாட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றது. அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தின் வருவாயைப் பெருக்கும் வகையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சூதாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். கடந்த மாதம் 23ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கடந்த 1990 மற்றும் 92 காலகட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக அரசின் முதல்வர் சுரேந்திரன் லாட்டரி சீட்டை மத்திய பிரதேச மாநிலத்தில் கொண்டு வந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும் தனது முடிவில் பாஜக பின்வாங்காமல் உறுதியாக இருந்தது. இருப்பினும் மாநிலம் முழுவதும் இதற்கு எதிர்ப்பலைகள் இருந்தாலும், ஏராளமான தற்கொலைகள் நிகழ்ந்தாலும் மீண்டும் அதே அரசு லாட்டரியை தடை செய்தது. இந்நிலையில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்தியபிரதேசத்தில் லாட்டரி மற்றும் சூதாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதற்கான சட்ட பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.