நீட் தேர்வு குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு தொடங்கி இரு நாட்களுக்குள் 2 பேர் தற்கொலை செய்துள்ளது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும், மாணவர்களின் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டிய கல்வியே அவர்களின் மரணத்துக்கு காரணமாக இருக்க கூடாது. மேலும் நீட் தேர்வானது தமிழக மாணவர்களுக்கு பொருத்தமில்லாதது மற்றும் தேவை இல்லாத பயத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது.
மாணவர்கள் எந்த சூழ்நிலையும் எதிர்த்து போராடவும், நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்யாமலும் மன உறுதியுடன் இருக்கவேண்டும். தமிழக அரசு இனியும் நீட் தேர்வால் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க மிகுந்த கடமையுடனும், பொறுப்புடனும் செயலாற்ற வேண்டும். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி கனிமொழியின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.