தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுக்கம்பாளையம் பகுதியில் தோட்டத்தில் வளர்க்கப்படும் நாய் அங்குள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனால் நாய் கிணற்றின் உள்ள பக்கவாட்டில் பாறையை பிடித்தபடி இரவு முழுவதும் குரைத்துக் கொண்டிருந்தது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றிலிருந்து நாயை உயிருடன் மீட்டனர். இவ்வாறு நாயை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.