Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 50 லட்சம் இருக்கும்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் தொழிற்சாலை உரிமையாளரான ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 100-க்கும் அதிகமான பெண்கள் அவரின் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். அதன்பின் இரவு நேரத்தில் பணிகளை முடித்ததும் ரவிசங்கர் தொழிற்சாலையை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார்.

அப்போது தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்துள்ளனர். இதனையடுத்து விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து மின் கசிவினால் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விபத்து குறித்து வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |