Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஸ்வின்?… வெளியான மாஸ் தகவல்…!!!

நடிகர் அஸ்வினின் அடுத்த படத்தை கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின் . தற்போது இவர் இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ரொமான்டிக் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தேஜூ அஸ்வினி, அவந்திகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் குக் வித் கோமாளி புகழ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Kumki' director Prabhu Solomon opens about his daughter's viral videos,  says, It's not appropriate for their family since it's against their  religion' | Tamil Movie News - Times of India

டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஸ்வினின் அடுத்த படத்தை கும்கி உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |