Categories
மாநில செய்திகள்

ஒன்னும் தப்ப கூடாது…! 5மலையை தாண்டியாகணும்… உத்தரவு போட்ட ஸ்டாலின்….!!!!

அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்ய போகின்றோம் ? என்னென்ன செய்வோம் ? என உறுதி மொழி கொடுத்துள்ளோம். தேர்தல் அறிக்கை வெளியிட்டோம்.

அதில் ஐநூறுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அடங்கி இருக்கின்றது. அப்போது மாவட்ட ரீதியாகவும் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றோம். அதில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என்னென்ன வாக்குறுதிகள் ? என்பதை பிரித்து  நாம்  வெளியிட்டிருக்கின்றோம்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஆளுநர் உரையில் இது  இடம்பெற்றது.இதில் நிதிநிலை அறிக்கை வழங்கப்பட்டது. வேளாண் நிதிநிலை அறிக்கை என புதிதாக தாக்கல் செய்தோம். சட்டமன்றத்தில் துறைவாரியாக மானியக்கோரிக்கை விவாதத்தில் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டோம்.

110 விதியை பயன்படுத்தி அதன் மூலமாக சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். இவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் நம்மிடம்தான் உள்ளது. அதை தான் நான் சொன்னேன்… நாம் ”5மலைகளை நாம் தாண்டியாகணும்” என்று, இந்த அறிவிப்புகள் அனைத்தையும் நாம் படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு அவசியம் தேவை.

இவை அனைத்தும் மக்கள் நன்மைக்காக  அளிக்கபட்ட உறுதிமொழிகள் ஆகும். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் அரசாணையாக வர வேண்டும் என்றால் அந்தந்த துறையின் செயலாளர்கள் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்

Categories

Tech |