Categories
சினிமா தமிழ் சினிமா

இன்று இரவு ‘வலிமை’ பட டீசர் வெளியாகிறதா?… திடீரென டிரெண்டாகும் ஹேஷ்டேக்…!!!

வலிமை படத்தின் டீசர் இன்று வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Watch: 'Valimai' update is finally here, featuring a stylish Ajith | The  News Minute

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இன்று இரவு 12 மணிக்கு வலிமை படத்தின் டீசர் வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் ‘வலிமை டீசர்’ என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வலிமை படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |