Categories
கிரிக்கெட் விளையாட்டு

CPL 2021 இறுதிப்போட்டி : செயிண்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தி …. சாம்பியன் பட்டத்தை வென்றது பேட்ரியாட்ஸ் ….!!!

சிபிஎல் 2021 தொடரின் இறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸை வீழ்த்திய  பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது .

2021 -ம் ஆண்டுக்கான சிபிஎல் தொடர் வெஸ்ட் இண்டீஸில்  நடைபெற்று வந்தது .இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் – செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன .இதில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் விளையாடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக ரகீம் கார்ன்வால், ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 43 ரன்கள் குவித்தனர் .இதன்பிறகு 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டரியால் அணி களமிறங்கியது.

இதில் களமிறங்கிய கெயில், லூயிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .இதன்பிறகு களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் இதனால் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியே  கோப்பையை வெல்லும் என்று நினைத்தது .ஆனால் ஆட்டத்தில் திடீர் திருப்பமாக களமிறங்கிய டோமினிக் டிரேக்ஸ் அதிரடியாக விளையாடி அணியை  தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்டார் .இறுதியாக  பேட்டரியால் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது .இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் லூயிஸ் கிங்ஸ் அணியை வீழ்த்தி  வெற்றி பெற்ற பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Categories

Tech |