மாவட்ட நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடை சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புறங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்பட்டுவருகிறது. மாவட்டத்தின் நகர்ப்புறங்களில் 38 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஓரளவிற்கு அனைவரும் பாதாளச் சாக்கடை இணைப்பை செய்து முடித்துவிட்டனர். தற்போது பாதாளச் சாக்கடையிலிருந்து கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியிருக்கிறது.
மழைக்காலங்களில் மட்டுமல்லாமல், வெயில் காலங்களிலும் இந்தக் கழிவு நீர் வெளியேற்றம் இருந்துவருகிறது.தற்போது டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியிருக்கும் நேரத்தில் கழிவுநீர் வெளியேற்றத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பாதாளச் சாக்கடை மூடிகள் திறந்திருப்பதால் விபத்துகள் அதிகமாக ஏற்பட்டுவருகின்றன. ஆகவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை சரிசெய்யும்படி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.