Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : தொடரில் இருந்து விலகிய தமிழக வீரர்….! காரணம் இதுதான் ….!!!

டெல்லி அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் தொடரில் இருந்து விலகியுள்ளார் .

14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி முதல் அமீரகத்தில்  நடைபெற உள்ளது .இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.  இதற்கான அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இடக்கை சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காயம் ஏற்பட்டுள்ளது . இதனால் இவர் போட்டியிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது .எனவே இவருக்கு பதிலாக இடக்கை வேகப்பந்து வீச்சாளரான குல்வந்த் கெஜ்ரோலியாவை டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Categories

Tech |