Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஜனநாயகம் இல்லை…. ”ஸ்டாலின் போலீசார்” பாசிச முறை என அதிமுக பரபரப்பு அறிக்கை…!!

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனையை அதிமுக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று காலை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதற்க்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்,

கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம், வளர்ச்சிக்கு அறிகுறி அது. நாம் மக்கள் வன விலங்குகள் அல்ல, இது நாடு, காடு  அல்ல. காட்டு முறையை கையாண்டால் அதற்கு பெயர் ஜனநாயகம் ஆகாது, பாசிச முறை என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் இந்த கூற்றுக்கு முற்றிலும் முரணான வகையில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.

அண்மையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சாத்தியப்படாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அதை நிறைவேற்ற முடியாமல், மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற நிலையில், அதனை மூடி மறைத்து உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சரும்,

திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், கழகத்தின் தீவிர செயல் வீரருமான கே சி வீரமணி அவர்களுடைய வீட்டிலும், அவரது உறவினர்கள் நண்பர்கள் என்று நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தவர்கள் என்று சுமார் 28 இடங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ”ஸ்டாலின் போலீசார்” சோதனை என்ற பெயரில் இன்று ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இது உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை என அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |