மினி லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் இவருக்கு 1௦ மாதம் முன்பாக திருமணம் முடிந்து நிஷாந்தினி என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தனது சொந்த ஊருக்கு பன்னீர்செல்வம் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மினி லாரி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பன்னீர்செல்வத்தை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.