Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 தொடரில் சாதனை படைத்த பிராவோ ….! 2-வது இடம் பிடித்து அசத்தல் ….!!!

 டி20 தொடரில் 500 போட்டிகளில் விளையாடி உள்ள பிராவோ இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் .

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான ஆல்ரவுண்டர் பிராவோ ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் 37 வயதான வெய்ன் பிராவோ டி20 தொடரில் 500 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார் .மேலும் கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் செயிண்ட் கீட்ஸ்-நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி கேப்டனாகவும் உள்ளார் இதில் நேற்று நடைபெற்ற சிபில் தொடரின் இறுதிப்போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்சை வீழ்த்தியது.

இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்ட் இந்த சாதனையை படைத்துள்ளார். இதுவரை 500 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 388 இன்னிங்ஸில் விளையாடி 6574 ரன்கள் குவித்துள்ளார் .மேலும் 540 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் .கடந்த 2006 -ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான பிராவோ கடந்த  2010-ம் ஆண்டு  டெஸ்ட் தொடரில் இருந்தும் , 2014-ம் ஆண்டு  ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.

Categories

Tech |