Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மக்களே… வரும் 27 ஆம் தேதி வரை மட்டுமே…. உடனே போய் வாங்கிக்கோங்க….!!!

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பெண்களுக்கு குடற்புழு நீங்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. அதில் ஒன்று முதல் 19 வயது வரையுள்ள 5.78 லட்சம் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் (20 முதல் 30 வயது வரை) என 2.4 லட்சம் பெண்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது .

இதைத்தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் வருகின்ற 27ஆம் தேதி வரை குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .  1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அப்பெண்டசோல் அரை மாத்திரையும்,  இரண்டு முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு ஒரு மாத்திரை எடுத்துக்கொள்ளலாம் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்ட  ஆட்சியர்  வினித், தேசிய  குடற்புழு நீக்கம் தினத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழுநீக்க மாத்திரை வழங்கினார். இதுகுறித்து சுகாதாரத் துறை கூறுகையில், குடற்புழு தொற்றால் ஏற்படும் நோய்கள் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு சுகவின்மை  ,படிப்பில் கவனமின்மை, பசியின்மை, ரத்தசோகை ,குமட்டல் வாந்தி ஆகிய நோய்கள் ஏற்படும். அப்பென்டசோல் மாத்திரையை எடுத்துக்கொண்டால் குடற்புழு தொற்றில் இருந்து விடுபடலாம். அப்பெண்டசோல் மாத்திரையை காலை அல்லது மதியம் உணவு சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து உட்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை  தெரிவித்துள்ளது.

Categories

Tech |