Categories
தேசிய செய்திகள்

“என் கிராமம் முன்னேறும் வரை…. நா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”… இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு…!!!

தன்னுடைய கிராமம் வளர்ச்சி அடையும்வரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று ஒரு பெண் கூறியுள்ளார்.

தங்களின் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக பல பெண்கள் திருமணத்தை தள்ளி வைத்து கொள்வதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு கர்நாடகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கிராமம் வளர்ச்சி அடையும் வரை நான் திருமணம் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார். தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா தாலுகா எச்.ராமபுரா கிராமம் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இந்த கிராமத்தில் சரியான சாலை வசதி கூட கிடையாது. கிராமத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லாததால் சேறும் சகதியுமாய் ரோடு காட்சியளிக்கின்றது.

இதனால் இணையதள வசதி, செல்போன் சேவையும் அங்கு கிடையாது. முறையான சாலை இல்லாத காரணத்தினால் பஸ்கள் இதுவரை அந்த கிராமத்திற்கு வந்ததே இல்லை. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், அவசர உதவி செய்ய தேவைப்படுபவர்கள் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றன. இந்த சிரமங்களை கண்கூடாக பார்த்த அந்த கிராமத்தில் பிறந்த பிந்து என்ற இளம் பெண் அதிர்ச்சி அடைந்து, பிரதமர் மற்றும் முதல் மந்திரிக்கு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்திற்கு கர்நாடக அரசின் தலைமைச் செயலகம் பதில் கடிதம் ஒன்று அனுப்பி வைத்தது. அதில் விரைவில் உங்கள் ஊரின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று எழுதி இருந்தது. ஆனால் தற்போது வரை அந்த கிராமத்தில் நிலவும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கூட கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் தனது ஊருக்குச் முறையான சாலை வசதி, இணையதள வசதி, செல்போன் சேவை, போக்குவரத்து சேவை கிடைக்கும் வரை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. தனது கிராமம் வளர்ச்சி அடைந்த பிறகே நான் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |