ரயில் இன்ஜின் அடியில் ஒருவரின் தலை சிக்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் குவகாத்தியில் இருந்து சென்னை காட்பாடி வழியாக பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ரயில்வே நிலையத்தில் வந்தடைந்துள்ளது. அப்போது ரயில் இன்ஜின் ஓட்டுநர் பராமரிப்புக்காக இறங்கி இன்ஜினின் முன் பகுதிக்கு வந்துள்ளார். அதில் ஒருவரின் தலை மட்டும் ரயில் என்ஜினில் சிக்கி இருந்ததை கண்டு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி ரயில்வே காவல் துறையினர் இன்ஜினில் சிக்கிய தலையை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து இது குறித்து விசாரணை நடத்திய போது பெரம்பூரில் வசிக்கும் பிரபு என்பதும் ரயில் தண்டவாளம் அருகாமையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வந்த போது ரயிலில் அடிபட்டு உடல் துண்டாகி தலை மட்டும் ரயில் என்ஜினில் சிக்கி இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் மீட்கப்பட்ட தலையை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.