வெஸ்ட் இண்டீஸ் நடைபெற்று வந்தத சிபிஎல் போட்டியின்போது கிறிஸ் கெய்லின் பேட் உடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை போன்று வெஸ்ட் இண்டீஸில் சிபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் – கயானா அமேசான் வாரியர்ஸ்அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் விளையாடிய கயானா அமேசான் வாரியர்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.
https://twitter.com/CPL/status/1437901450974150658
இதன் பின் களமிறங்கிய அணி செயிண்ட் கிட்ஸ் 17.5 ஓவரில் 181 ரன்கள் குவித்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் களமிறங்கி விளையாடினார். அப்போது 4வது ஓவரில் எதிரணி வீரர் ஒடியன் ஸ்மித் வீசிய பந்தை கெய்ல் எதிர்கொண்டார். ஆனால் பந்து வந்த வேகத்தில் இவருடைய பேட்டை இரண்டாக உடைத்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது .