லண்டனில் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லண்டனில் உள்ள டோலிஸ் ஹில் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் அடுத்தடுத்து மூன்று வார இறுதிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த மூன்று சம்பவங்களும் ஒன்றையொன்று தொடர்புடையது என்றும் இதனை ஒரே நபர் தான் செய்துள்ளார் என்றும் போலீசார் சந்தேகித்து வருகின்றனர். அதிலும் முதல் சம்பவமானது ஆகஸ்ட் 28 ஆம் தேதி இரவு 11 .25 மணிக்கு ஃப்ளீட்வுட் சாலையில் 30 வயது பெண் ஒருவர் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அவரை பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து 8 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று 21 வயது பெண் இரவு 10 மணிக்கு எல்லெஸ்மியர் சாலையில் சென்ற போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து செப்டம்பர் 11 ஆம்தேதி இரவு 10.15 மணியளவில் அதே எல்லெஸ்மியர் சாலையில் மற்றொரு 21 வயது பெண் மர்ம நபரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். அப்பொழுது ஆள் நடமாட்டம் தெரிந்தவுடன் அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் கூறிய பதில் ஒரே மாதிரியாக இருந்தது. அதாவது அந்த மர்ம நபர் கலப்பு இனத்தவர் என்றும் லேசான உடல்வாகு கொண்டவர் மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்தார் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரித்த தலைமை அதிகாரி மற்றும் துப்பறியும் ஆய்வாளரான ஜானி நியூவெல் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “குற்றவாளி தனது தாக்குதல்களை செய்வதற்கு முன்பாக ஒதுங்கிய பகுதிகளில் பெண்களை பின் தொடர்ந்துள்ளார். மேலும் அவனின் நோக்கம் ஒன்றே. ஒரு வேளை அப்பகுதியில் இருக்கும் எவரேனும் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரை பார்த்தாலோ அல்லது சிசிடிவி காட்சிகளில் ஏதேனும் பதிவாகி இருந்தாலோ அது குறித்து சிந்திக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அங்கு ரோந்து பணிகள் அதிகமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் லண்டன் மக்களுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குற்றவாளியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது ஆதலால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார்” என்று கூறியுள்ளார்.