காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 10 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் அழிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் அடைக்கப்பட்டபோது வெளி மாநிலத்திலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி அம்மாபேட்டை காவல்துறையினர் 3 ஆயிரம் மது பாட்டில்களையும், அந்தியூர் காவல்துறையினர் 667 மது பாட்டில்களையும், வெள்ளிதிருப்பூர் காவல்துறையினர் 280 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்திருந்தனர்.
இதனயயடுத்து பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் அந்தியூர் பெரிய ஏரி பகுதியில் அழிக்கப்பட்டது. அப்போது கோபி கலால் தாசில்தார் ஷீலா, அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் போன்றோர் முன்னிலையில் 3,947 மதுபாட்டில்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் உடைத்து அழிக்கப்பட்டது. இவ்வாறு அழிக்கப்பட்ட மது பாட்டில்களில் மொத்த மதிப்பு 10 லட்சம் ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.