ரயில் பயணியிடம் திருடி விட்டு தப்பி சென்ற இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லண்டனில் கடந்த ஆகஸ்ட் மாதம் St Pancras to Blackfrias ஆகிய நகரங்களுக்கு இடையே இரவு 11 மணியளவில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ரயிலில் பயணம் செய்த ஒரு பயணியின் அருகே சென்று இருவர் அமர்ந்துள்ளனர். இதனை அடுத்து அந்த பயணியை ரயில் ஜன்னலில் இருவரும் சேர்ந்து கட்டுப்போட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டு பேரில் ஒருவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி அந்த பயணியிடம் இருந்து பர்ஸை திருடி விட்டு ரயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சியானது ரயிலில் உள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை போலீசார் தற்போது கைப்பற்றி இரண்டு திருடர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து போலீசார் கூறுகையில், ரயிலில் இரண்டு திருடர்கள் கத்தி முனையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளனர். அவர்கள் குறித்து ஏதேனும் தகவல் அறிந்தால் எங்களை அணுகவும்” என்று தெரிவித்துள்ளனர்.