மியான்மர் நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
மியான்மர் நாட்டில் இன்று காலை 10.19 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.